டிச. 22-
தெலுக் இந்தானுக்கு அருகில் உள்ள Changkat Ladaவில் கால்வாயில் விளையாடிக் கொண்டிருந்த 39 வயது நபர் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார். அவர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுவதாக பேரா மாநில தீயணைப்பு – மீட்புப் படையின் அதிகாரி Sabarodzi Nor Ahmad தெரிவித்தார்.
மலாக்கா காவல் நிலையத்தில் பணிபுரியும் அந்த ஆடவர், நண்பர்களுடன் தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்தபோது சோர்வடைந்து கரைக்கு வர முயன்றபோது நீரோட்டத்தில் சிக்கிக் கொண்டார். அந்த நீர் கால்வாய் சுமார் 4 மீட்டர் ஆழம் கொண்டது.
இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.45 மணியளவில் நிகழ்ந்துள்ளது. பேராக் தீயணைப்பு – மீட்புத் துறையினர் தேடல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.