26 ஓட்டுநர் பயிற்சி நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டது

டிச. 22-

சிலாங்கூர் சாலைப் போக்குவரத்துத் துறை நடத்திய சிறப்பு சோதனையில் ஓட்டுநர் பயிற்சி நிறுவனங்களில் சீட் பெல்ட் அணியாதது, நிர்ணயிக்கப்பட்ட விவரக்குறிப்புகளை பூர்த்தி செய்யாத வாகனங்களைப் பயன்படுத்துதல் போன்ற தவறுகள் கண்டறியப்பட்டன. இந்த சோதனை 26 ஓட்டுநர் பயிற்சி நிறுவனங்களில் நடத்தப்பட்டதாக இலாங்கூர் மாநில சாலைப் போக்குவரத்துத் துறையின் இயக்குநர் Azrin Borhan தெரிவித்தார்,

இந்த சோதனையில் 164 பயிற்சி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. பயிற்சி ஆசிரியர்கள் சீட் பெல்ட் அணியாதது, வாகனங்களின் தொழில்நுட்ப குறைபாடுகள் முக்கிய தவறுகளாக கண்டறியப்பட்டன. பல்வேறு தவறுகளுக்காக ஏழு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன.

வாகன ஓட்டுநர் பயிற்சி நிறுவனத்தின் அனுமதி, பயிற்சி ஆசிரியர்களின் சான்றிதழ், பயிற்சிக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களின் தரம் ஆகியவை சோதனையின் முக்கிய அம்சங்களாக இருந்தன. பயிற்சி நிறுவனங்கள் அனைத்து விதிகளையும் பின்பற்றுவதை உறுதி செய்வதே சோதனையின் நோக்கம் என Azrin Borhan குறிப்பிட்டார்,

வாகன ஓட்டுநர் பயிற்சி நிறுவனங்கள் சட்டத்தை பின்பற்றுவதன் மூலமும், சிறந்த சேவையை வழங்குவதன் மூலமும் திறமையான ஓட்டுநர்களை உருவாக்க முடியும் என்று JPJ வலியுறுத்தியுள்ளது. மேலும், தொடர்ச்சியான சோதனைகள் மூலம் நிறுவனங்கள் விதிகளை பின்பற்றுவது உறுதி செய்யப்படும் என்று Azrin Borhan மேலும் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS