கோலாலம்பூர், டிச. 27-
இந்திய முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மறைவிற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டார்.
டாக்டர் மன்மோகன் சிங், தமக்கு நெருக்கிய நண்பர் என்றும், அவரின் மறைவு தமக்கு பெரும் தவருத்ததைத் தந்துள்ளது என்றும் டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
மறைந்த மன்மோகன் சிங் ஒரு பெரும் தலைவர் மட்டுமின்றி இந்தியப் பொருளாதார உருமாற்றத்தை வடிவமைத்த சிற்பியாவார் என்று பிரதமர் வர்ணித்தார்.
பொருளாதார வல்லரசுகளில் ஒன்றாக இந்தியாவை உருவாக்குவதில் மன்மோகன் சிங்கின் பங்களிப்பு அளப்பரியதாகும்.
தாம் சிறைச்சாலையில் தள்ளப்பட்ட போது மிகவும் வேதனை அடைந்தவர்களில் மன்மோகன் சிங்கும் ஒருவர் ஆவர். அவர் தமது வருத்தத்தைத் தெரிவித்துக்கொண்ட விவகாரம் இன்று வரை பலருக்கு தெரியாது என்று டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.