கூலாய், டிச. 28-
மோட்டார் சைக்கிளோட்டிக்கு, மரணம் ஏற்பட காரணமாக இருந்ததாக சந்தேகிகப்படும் வாகனமோட்டியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஜோகூர், சினாய்உத்தாராவை நோக்கி லெபோராயா லிங்டுவா நெடுஞ்சாலையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் ஹோண்டா மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே மாண்டார்.
விபத்துக்கு காரணமான வாகனம் என்று சந்தேகிக்கப்படும் இன்னும் அடையாளம் காணப்படாத ஒரு லோரி தொடர்பில் போலீசார் புலன் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர் என்று கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி டான் செங் லீ தெரிவித்தார்.
வலது பக்க வழித்தடத்தில் சென்று கொண்டிருந்த லோரி ஒன்றை தவிர்ப்பதற்காக மோட்டார் சைக்கிளோட்டி முயற்சி செய்த வேளையில் அந்த இரு சக்கர வாகனம், வேகக்கட்டுப்பாட்டை இழந்து, சாலைத்தடுப்பில் மோதி, 30 வயது மதிக்க நபர் மரணமுற்றதாக நம்பப்படுகிறது என்று ஏசிபி டான் செங் லீ குறிப்பிட்டார்.