பினாங்கு, டிச.28-
பள்ளி விடுமுறை, கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் ஆகிய விடுமுறைகளையொட்டி பினாங்கில் மக்கள் கூட்டம் நிரம்பியுள்ளது என்பதுடன் ஹோட்டல்கள் முழுமையாக முன்உறுதி செய்யப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
2024 ஆம் ஆண்டுக்கு விடையளிக்கும் இறுதி வாரத்தை நெருங்கிக்கொண்டு இவ்வேளையில் பலரது புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான இலக்காக பினாங்கை தேர்வு செய்துள்ளனர் என்று ஹோட்டல் தொழில்துறை தரவுகள் காட்டுகின்றன.
பினாங்கின் பிரதான கடற்பகுதியான பத்து பெரிங்கியையொட்டிய ஹோட்டல்களின் அறைகள் அனைத்தும் அடுத்த 6 நாட்களுக்கு காலியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது
பள்ளி விடுமுறை தொடங்கியதைத் தொடர்ந்து உள்ளூர் சுற்றுப்பயணிகள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுப்பயணிகளும் பினாங்கு தீவில் குவிந்து வருவதாக பெர்னாமா ஆய்வுகள் கூறுகின்றன.