கிளந்தானிலும் பொது மக்கள் முன்னிலையில் பிரம்படித் தண்டனை

கோத்தாபாரு, டிச. 28-


திரெங்கானு மாநிலத்தில் பொது மக்கள் முன்னிலையில் கல்வத் குற்றவாளிக்கு 6 பிரம்படித் தண்டனை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து கிளந்தான் மாநிலத்திலும் அத்தகைய தண்டனை முறையை அமல்படுத்துவதற்கு மாநில அரசாங்கம் தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது மக்கள் முன்னிலையில் 42 வயதுடைய கல்வத் குற்றவாளிக்கு எஸ்.ஓ.பி. நடைமுறையைப்பயன்படுத்தி, நேற்று தண்டனை நிறைவேற்றப்பட்டு இருப்பது, மிகச்சிறந்த அணுகுமுறையாகும்.

இஸ்லாத்தின் ஷரியா சட்ட நடைமுறைகளைப் பயன்படுத்தி, கிளந்தானிலும் அந்த தண்டனை முறையை கொண்டு வருவதற்கான சாத்தியம் இருப்பதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் முகமட் அஸ்ரி மாட் டாவுட் தெரிவித்தார்.

பொது மக்கள் முன்னிலையில் தண்டனை நிறைவேற்றும் முறையை கிளந்தான் மாநில அரசாங்கம் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்ற போதிலும், திரெங்கானு மாநில அரசாங்கம் செய்ததைப் போல தனது மாநில ஷரியா சட்ட நடைமுறைகளில் 2022 ஆம் ஆண்டிலே திருத்தம் கொண்டு வந்து இருப்பதை அந்த ஆட்சிக்குழு உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.

அந்த சட்டத்திருத்ததின்படி கிளந்தானில் பொது மக்கள் முன்னிலையில் பிரம்படித் தண்டனை நிறைவேற்ற முடியும் என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.

WATCH OUR LATEST NEWS