இரு கொள்ளையர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

மலாக்கா, டிச.28-


மலாக்கா, பண்டார் ஹிலிரில் பிரபல பேரங்ககாடி கட்டடத்தில் உள்ள நகைக்கடைக்குள் நுழைந்த ஆயுதமேந்திய இரண்டு முகமூடி கொள்ளைர்கள், நகைகளை பெருவாரியாக கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இத்துணிகரச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நிகழ்ந்தது.

முகமூடி மற்றும் கறுப்பு நிற ஜேக்கெட்டை அணிந்திருந்த அந்த இரு கொள்ளையர்களும், நகைக்கடையில் இரண்டு பெண் பணியாளர்களை ஆயுதமுனையில் அச்சுறுத்துவதை, அந்த நகைக்கடையில் பொருத்தப்பட்டு இருந்த ரகசிய கேமரா பதிவில் தெரியவந்ததுள்ளது.

முகமூடி கொள்ளையர்களை கண்டதும், அந்த இரு பெண்களும் பயத்தால் நடுங்கிய வேளையில் இரு கொள்ளையர்களின் ஒருவன், நகைகள் வைக்கப்பட்ட கண்ணாடி பேழை மீது ஏறி, உட்பகுதிக்குள் நுழைந்து நகைகளை கொள்ளையிட்டுள்ளான்.

இச்சம்பவத்தை உறுதிப்படுத்திய மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கிறிஸ்டோபர் பத்திட் இவ்விவகாரம் இன்னமும் விசாரணையில் இருந்து வருவதாக குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS