பெர்சத்து கட்சியின் மகளிர் பிரிவினர் நாடு தழுவிய அளவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்

டிச. 29-

முன்னாள் காவல் துறைத் தலைவர் மூசா ஹசனுக்கு எதிரான அவதூறு வழக்கில் ஹன்னா யோவுக்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, பெர்சத்து கட்சியின் மகளிர் பிரிவினர் நாடு தழுவிய அளவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஹன்னா யோவின் நடவடிக்கைகளை விசாரிக்கவும், அவர் எழுதிய புத்தகத்தை தடை செய்யவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளர்தாக அதன் துணைத் தலைவர் Nolee Ashilin Mohammed Radzi வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்,

ஹன்னா யோ மலேசியாவை கிறிஸ்தவ நாடாக மாற்ற முயற்சிக்கிறார் என்றும், முஸ்லிம்களை மதமாற்றம் செய்ய முயற்சிக்கிறார் என்றும் சமூக ஊடகங்களில் பரவும் தகவல்களுக்கு எதிராகவும் ஹன்னா யோ காவல் நிலையத்தில் புகார் அளிக்கவுள்ளார்.

உயர் நீதிமன்றம் ஹன்னா யோவின் அவதூறு வழக்கை தள்ளுபடி செய்தது. மூசா ஹசனின் கருத்துக்கள் குறிப்பாக ஹன்னா யோவை குறிக்கவில்லை என்று நீதிமன்றம் கூறியது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஹன்னா யோ மேல்முறையீடு செய்துள்ளார்.

ஹன்னா யோவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் இஸ்லாத்தின் தூய்மையும் மலாய் மன்னர்களின் இறையாண்மையையும் பாதுகாக்க மேலும் நடவடிக்கை எடுப்போம் என்றும் கூறியுள்ளனர் பெர்சத்து மகளிர் பிரிவினர்.

WATCH OUR LATEST NEWS