டிச. 29-
கோலாலம்பூரில் உள்ள Desa Rejang மக்கள் குடியிருப்புப் பகுதியில் மின் தூக்கியை மாற்றும் பணிகள் தாமதமாவதால் 170க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உட்பட 18 ஆயிரத்திற்கும் குடியிருப்பாளர்கள் சிரமப்படுகின்றனர். 16 நாட்களாக மின் தூக்கி வசதி இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
கோலாலம்பூர் சமூக நல இயக்க அமைப்பின் தலைவர் Hussein Zulkarai இவ்விவகாரம் குறித்து பேசுகயில், கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவ பரிசோதனைக்கு செல்ல முடியாமல் அவதிப்படுவதாகவும், பள்ளி குழந்தைகள் படிக்கட்டுகளில் ஏறி இறங்க சிரமப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், பிரதமர் தலையிட்டு இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
குத்தகை நிறுவனம் பணிகளை நவம்பர் 15க்குள் முடித்திருக்க வேண்டும், ஆனால் பணிகள் தாமதமாகி வருவதாக அவ்வமைப்பின் துணைத் தலைவர் Affa Syaripuddin குற்றம் சாட்டினார். நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
Desa Rejang PPR இல் 12 கட்டடங்களும் 2791 வீடுகளும் உள்ளன. இங்குள்ள 38 மின் தூக்கிகளை மாற்றுவதில் கோலாலம்பூர் மாநகர் மன்றம் நியமித்த குத்தகையாளர் தாமதம் செய்து வருகிறார். சமீபத்தில் ஒரு கட்டடத்தில் மின் தூக்கி விழுந்த சம்பவம் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.