உப்பு பயன்பாட்டுக்கு எதிரான இயக்கத்தை தொடக்கத் தயாராக இருக்கிறது

 ஜன.3-

சுகாதார அமைச்சு உப்பு பயன்பாட்டுக்கு எதிரான இயக்கத்தை தொடக்கத் தயாராக இருக்கிறது. மலேசியர்கள் மத்தியில் உப்பு பயன்பாட்டைக் குறைப்பதே அதன் நோக்கமாகும் என சுகாதார அமைச்சர் Datuk Seri Dr Dzulkefly Ahmad தெரிவித்தார். அகால மரணங்களுக்கு இட்டுச் செல்லும் பல்வேறு நாட்பட்ட நோய்கள் ஏற்பட உப்பு முக்கியக் காரணமாக விளங்குகிறது. எனவே அதன் பயன்பாட்டைக் குறைப்பது மிக அவசியம் என Dr. Dzulkefly சொன்னார்.

உப்பு பயன்பாட்டுக்கு எதிரான இயக்கம் தற்போது திட்டமிடல் நிலையிலேயே உள்ளது. அதனைச் செயல்படுத்துவது எப்படி என்பதை உறுதிச் செய்ய சமசத்துணவுப் பிரிவும் பொது சுகாதாரப் பிரிவும் இணைந்து செயல்படவிருக்கின்றன.

சமூகத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்க இதற்கு முன் அமைச்சு சீனி மற்றும் சிகரெட்டுக்கு எதிரான நடவடிக்கைகைகளை அறிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியே உப்புக்கு எதிரான இயக்கம் என்பதை Dr. Dzulkefly சுட்டிக் காட்டினார்.

உணவில் உப்பை அதிகம் சேர்த்தும் கொள்வது தொடர்பில் ஒவ்வோர் ஆண்டும் மிக அதிகமாக 1.89 மில்லியன் மரணங்கள் ஏற்படுவது உலக சுகாதார நிறுவனம் WHO கடந்தாண்டு வெளியிட்ட அறிக்கையில் தெரிய வந்துள்ளது. சுகாதாரத்தை மேம்படுத்தும் அதே வேளை தொற்றாத நோய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த உப்பு பயன்பாட்டைக் குறைப்பது மிக ஆக்ககரமான வழி என்றும் WHO அந்த அறிக்கையில் வலியுறுத்தியிருந்தது.

WATCH OUR LATEST NEWS