வாகனப் போக்குவரத்தால் ஏற்பட்ட அதிர்வுகள் காரணமாக கட்டடத்தின் மர விட்டங்கள் சரிந்தன

ஜன.6-

வரலாற்று மாநிலமான மலாக்காவில் உள்ள Jalan Laksamana Banda Hilirஇல் உள்ள Stadthuys கட்டடத்தில் உள்ள Street Kitchen வணிக வளாகம் சேதமடைந்துள்ளது. இது யு UNESCOவால் பாதுகாக்கப்பட்ட வரலாற்று கட்டடம் என்பதால், சாதாரண முறையில் பழுது பார்க்க முடியாது. UNESCOவின் விதிமுறைகளும் தேசிய பாரம்பரியத் துறையின் அனுமதியுடனும் மட்டுமே பழுது பார்க்க முடியும் என Datuk Bandar Majlis Bandaraya Melaka Bersejarah MBMB , Datuk Shadan Othman தெரிவித்தார்.

சமீபத்தில், அதிக வாகனப் போக்குவரத்தால் ஏற்பட்ட அதிர்வுகள் காரணமாக கட்டடத்தின் மர விட்டங்கள் சரிந்தன. ஒவ்வொரு வார இறுதியிலும் பொது விடுமுறை நாட்களிலும் சுமார் 27 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வாகனங்கள் அந்த சாலையைப் பயன்படுத்துகின்றன.

எனவே, MBMB இந்த விவ்காரத்தை யுனெஸ்கோவுக்கு அனுப்ப தேசிய பாரம்பரியத் துறைக்கு அறிக்கை செய்துள்ளதாக Shadan Othm குறிப்பிட்டார். மேலும், கட்டடத்தின் கட்டமைப்பை அதன் அசல் நிலையில் பராமரிக்க சிறப்பு சிமெண்ட் கலவை பயன்படுத்தப்படும் என்றும் மற்ற வளாகங்கள் நல்ல நிலையில் உள்ளதாகவும் Shadan Othm கூறினார்.

WATCH OUR LATEST NEWS