ஜன.6-
கோலாலம்பூரில் உள்ள Wisma Transitஇல் பாலஸ்தீனிய அகதிகள் ஏற்படுத்திய குழப்பமும் கலவரம் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. பாதுகாப்பு அமைச்சரிடமிருந்து தற்போதைய நிலை குறித்த தகவல்கள் பெறப்படும் என்றும், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய இடத்திற்கு அகதிகளை மாற்றுவது குறித்தும் கூட்டத்தில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ஒற்றுமை அரசாங்கத்தின் பேச்சாளரான Fahmi Fadzil குறிப்பிட்டார்.
மலேசிய ஆயுதப் படைகளின் கூற்றுப்படி, பாலஸ்தீனத்திற்கு விரைவாக திரும்ப வேண்டும் என்ற அவர்களின் ஆர்வமே குழப்பத்திற்குக் காரணம். முந்தைய தகவல்களின்படி, இஸ்ரேல் தாக்குதலில் காயமடைந்த 41 பேர் உட்பட 127 பாலஸ்தீனியர்கள் மருத்துவ சிகிச்சைக்காக மலேசியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் WTKL இல் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
WTKL இல் இது போன்ற இரண்டாவது சம்பவம் இதுவாகும். இதற்கு முன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலும் இதே போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தின் முழு விவரங்களும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, அரசாங்கம் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.