ஜன.6-
புத்ராஜெயாவில் திட்டமிடப்பட்டிருந்த நஜிப் ரசாக்கிற்கு ஆதரபுப் பேரணிக்குப் பதிலாக, 2,000க்கும் அதிகமான ம.இ.கா. உறுப்பினர்கள் பத்து மலைத் திருத்தலத்தில் நஜிப் ரசாக்கிற்காக சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டனர். காவல் துறையின் அறிவுறுத்தலின் காரணமாக புத்ராஜெயாவில் ஆதரவு தெரிவிக்க முடியாததால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.
ம.இ.கா.வின் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ மு சரவணன், சுமார் 3 ஆயிரத்து 500 உறுப்பினர்கள் வரை இந்த வழிபாடு கூட்டத்தில் கலந்து கொண்டதாக தெரிவித்தார், இது எதிர்பார்க்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமாகும். அம்னோ, PAS, பெர்சத்து போன்ற கட்சிகளின் தலைவர்களும் புத்ராஜெயாவில் நஜிபுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
நஜிப் தனது எஞ்சிய சிறைத்தண்டனையை வீட்டுக்காவலில் கழிக்க அனுமதிக்கும் மேல்முறையீட்டில் புதிய ஆதாரங்களை சமர்ப்பிப்பதற்கான அனுமதிக் கோரிக்கையை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று விசாரிககும் சூழ்நிலையில் ம.இ.கா.வின் இந்த ஆதரவு முக்கியத்துவம் பெறுகிறது என ம.இ.கா. தெரிவித்தது.