ஜன.6-
நஜிப் ரசாக் தனது எஞ்சிய சிறைத்தண்டனையை வீட்டுக்காவலில் கழிக்க அனுமதிக்கும் கூடுதல் கட்டளையான Titah Adendum இருப்பதை நிரூபிக்கும் நீதித்துறை மறுஆய்வு நடவடிக்கைகளைத் தொடங்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும், உயர்நீதிமன்ற விசாரணையின்போது புதிய ஆதாரங்களை சமர்ப்பிப்பதற்கான அவரது விண்ணப்பமும் அனுமதிக்கப்பட்டது.
நீதிபதி Firuz Jaffril , நஜிப் ஆறு பிரதிவாதிகளுக்குக் கடிதம் எழுதியும் அவர்களிடம் இருந்து பதில் இல்லை என்றும், பகாங் சுல்தானிடம் இருந்து Titah Adendumமின் நகலைப் பெற்றதாகவும் கூறினார். அரசாங்கம் இதற்கு வலுவான மறுப்பு தெரிவிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். நீதிபதிகள் Azhahari Kamal Ramli யும் Firuz உம் நஜிப்பின் கருத்தை ஆதரித்தனர்.
மேல்முறையீட்டு நீதிமன்றக் குழுவின் தலைவர் நீதிபதி Azizah Nawawi, இந்த கருத்துடன் உடன்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தீர்ப்பு நஜிப்பின் வீட்டுக்காவல் கோரிக்கைக்கு ஒரு முக்கிய திருப்பமாக கருதப்படுகிறது.