வெளிவந்தது பகாங் சுல்தான் மன்றத்திடம் இருந்து நஜீப்பின் வீட்டுக் காவல் கடிதம்!

புத்ராஜெயா, ஜன.6-

முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் தனது எஞ்சிய சிறைத்தண்டனையை வீட்டுக்காவலில் கழிக்க அனுமதிக்கும் கூடுதல் கட்டளையான Titah Adendum இருப்பதாக பகாங் சுல்தான் மன்றத்திடம் இருந்து ஒரு கடிதம் வெளி வந்திருப்பதாக வழக்கறிஞர் Tan Sri Muhammad Shafee Abdullah இன்று தெரிவித்தார்.

Muhammad Shafee யின் கூற்றுப்படி, கடந்த ஜனவரி 4 தேதியிட்ட அந்தக் கடிதம், நஜிப்பின் மூத்த மகனான டத்தோ முகமது நிசாருக்கு பகாங் சுல்தானின் கீழ்ப்பட்ட Pengelola Bijaya Diraja Ke-Bawah Duli Paduka Baginda Sultan Pahang , Datuk Ahmad Khirrizal Ab Rahmanஆல் அனுப்பப்பட்டது.

அந்த கூடுதல் கட்டளை தொடர்பான நீதித்துறை மறுஆய்வுக்கான அனுமதியைப் பெறுவதற்கான தனது மேல்முறையீட்டில் கூடுதல் ஆதாரங்களைச் சேர்க்க நஜிப் செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும்போது முஹம்மது ஷாஃபி அந்த ஆவணத்தை இணைத்தார்.

16வது மாமன்னராக பகாங் ஆட்சியாளர் Al-Sultan Abdullah Ri’ayatuddin Al-Mustafa Billah Shah, கடந்தாண்டு ஜனவரி 29 ஆம் தேதியிட்ட கூடுதல் கட்டளை மூலம் நஜிப் தனது எஞ்சிய சிறைத்தண்டனையை வீட்டுக்காவல் மூலம் கழிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதாக அந்தக் கடிதம் விளக்குகிறது. Titah Adendum உள்ளது ன்றும் அஃது உண்மையானது என்றும் பகாங் சுல்தான் சார்பாக Pengelola Bijaya Diraja சான்றளிப்பதாக அந்தக் கடிதம் மேலும் கூறுகிறது.

WATCH OUR LATEST NEWS