ஷா ஆலாம், ஜன.6-
போலி முதலீட்டுத்திட்டத்தில் பணத்தை செலுத்தி விமானி ஒருவர் பத்து லட்சம் ரிங்கிட்டிற்கும் அதிகமான தொகையை இழந்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட ஒரு விளம்பரத்தை நம்பி, 50 வயது மதிக்கத்தக்க அந்த விமானி பணத்தை செலுத்தி, ஏமாந்துள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.