கோலாலம்பூர், ஜன.6-
டத்தோஸ்ரீ நஜீப் விவகாரத்தில் அரசாணை உத்தரவு இருப்பதாக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒற்றுமை அரசாங்கத்தில் அம்னோவின் நிலைப்பாட்டை அதன் பொறுப்பாளர்கள் அறிவிக்க வேண்டும் என்று அம்னோவின் மூத்த தலைவர் தெங்கு ரசாலி ஹம்சா கேட்டுக்கொண்டுள்ளார்.
அப்படியொரு அரசாணை உத்தரவு இருப்பதாக கூறி, நஜீப் செய்து கொண்ட மேல்முறையீட்டு வழக்கில் இந்த விவகாரம் அம்பலமாகியுள்ளது. எனவே அம்னோ தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினரான தெங்கு ரசாலி வலியுறுத்தியுள்ளார்.