கேமரன்மலை, ஜன.6-
நிலச்சரிவு சம்பவத்தினால் மூடப்பட்ட கேமரன்மலை, கம்போங் ராஜா, ஜாலான் பெசார், பத்து 59 சாலை இன்று மதியம் 12 மணியளவில் அனைத்து வாகனங்களுக்கும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 2.45 மணியளவில் நிகழ்ந்த நிலச்சரிவினால் மண்ணும், பாறைகளும், மரங்களும் சாலையில் விழுந்து மலைப்போல் குவிந்துக் கிடந்ததால் போக்குவரத்திற்கு பெரும் இடையூற்றை ஏற்படுத்தியதாக கேமரன் மலை மாவட்ட போலீஸ் தலைவர் அஸ்ரி ரம்லி தெரிவித்தார்.
இதேபோன்று தானா ராத்தாவிற்கு செல்லும் ஜாலான் உத்தாமா ரிங்லெட் சாலையின் 33 ஆவது மைலிலும் நிலச்சரிவு ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.