ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளியில் தீ: மாணவர்கள் பீதியில் மூழ்கினர்

ஆயர்தாவார், ஜன.6-


பேரா, ஆயர் தாவார் தோட்டத் தமிழ்ப்பள்ளி கட்டடம் இன்று தீ பிடித்துக்கொண்டது. இதனால், அந்த தமிழ்ப்பள்ளியின் 32 மாணவர்கள் பெரும் பதற்றம் அ டைந்தனர்.

இந்த தீச் சம்பவம் குறித்து காலை 11.52 மணியளவில் தாங்கள் அவசர அழைப்பை பெற்றதாக ஆயர் தாவார் தீயணைப்பு நிலைய அதிகாரி தெரிவித்தார்.

பள்ளியின் மூன்று வகுப்பறைகள், ஒரு அறிவியல் கூடம், பள்ளித் தளவாட கிடங்கு மற்றும் சிற்றுண்டி சாலை ஆகியவை தீயில் அழிந்ததாக அவர் குறிப்பிட்டார்.

எனினும் எந்தவொரு உயிர்சேதமும் ஏற்படவில்லை. அனைத்து மாணவர்களும் அவசர அவசரமாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என்று பேரா மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் சபரோட்ஷி நோர் அகமட் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS