தடையை மீறுபவர்களுக்கு சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்

ஜன.7-

ஆறு புத்தகங்களைத் தடை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது மலேசிய உள்துறை அமைச்சு. இந்த புத்தகங்கள் மலேசிய சமூகத்தின் கலாச்சாரத்திற்கும் நற்பண்புகளுக்கும் முரணான கருத்துக்களைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. தடை செய்யப்பட்ட புத்தகங்களில் சில LGBT கருத்துக்களை ஆதரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

Monica Murphy எழுதிய A Million Kisses in Your Lifetime’
Erik J Brown எழுதிய ‘Lose You to Find Me’
Asyraf Bakti எழுதிய ‘Punai’
Rainbow Rowell எழுதிய ‘Scattered Showers’
Raziel Reid எழுதிய ‘When Everything Feels Like the Movie’
Albertalli யும் Adam Silverraவும் இணைந்து எழுதிய ‘What If It’s Us’ oleh Becky
ஆகிய புத்தகங்கள் அச்சு – வெளியீட்டுச் சட்டம் 1984 இன் கீழ் தடை செய்யப்பட்டுள்ளன.

இந்தச் சட்டத்தின் படி, தடை செய்யப்பட்ட அப்புத்தகங்களை அச்சிடுதல், விநியோகம் செய்தல் வைத்திருத்தல் சட்டவிரோதமாகும். தடையை மீறுபவர்களுக்கு சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

அரசாங்கம் உள்ளூர் சமூக கலாச்சாரத்திற்கு முரணானக் கருத்துக்கள் பரவுவதைத் தடுப்பதில் உறுதியாக உள்ளது என்றகமைச்சு தெரிவித்துள்ளது. இந்த தடை உத்தரவு சமூக நல்லிணக்கத்தையும் அமைதியையும் பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை என்று அமைச்சு மேலும் கூறியது.

WATCH OUR LATEST NEWS