ஜன.7-
நேற்று இரவு LPT 1 ழக்கு கடற்கரை நெடுஞ்சாலைஇல் புக்கிட் திங்கி அருகே, கிலோமீட்டர் 42.1, சுமார் 20 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் பழைய இரும்புப் பொருட்கள் நிறைந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர். லாரியின் முன்பகுதியில் உடல்கள் சிக்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக பகாங் மாநில தீயணைப்பு – மீட்புப் படையின் பேச்சாளர் குறிப்பீட்டார்.
இரவு 8:16 மணிக்கு விபத்து குறித்து தகவல் பெற்ற அவர்கள், மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். மோப்ப நாய்களின் உதவியுடன் தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இன்று காலை 9. 30 மணிக்கு இருவரின் உடல்களும் மீட்கப்பட்டன.
உயிரிழந்த இருவரும் பெந்தோங் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டனர். இதுவரை உயிரிழந்தவர்களின் அடையாளம் கண்டறியப்படவில்லை.