28 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்

ஜன.7-

பினாங்கு Gat Lebuh Macallumமில் உள்ள மொத்த விற்பனை சந்தையில் பினாங்கு மாநகராட்சி மன்றம் MBPPயும் குடிநுழைவுத் துறையும் இணைந்து நடத்திய சோதனையில் 28 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். உரிமம் இல்லாமல் உணவு நிறுவனங்களை நடத்தியது, விளம்பர பலகைகளை வைத்திருந்தது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கையின் போது, 57 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சோதனையிடப்பட்டனர், அவர்களுக்கு சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக ஆறு அபராத நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன. தப்பிக்கவும் பதுங்கியும் இருந்த சில தொழிலாளர்களும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்கள் குடிநுழைவு சட்டத்தின் கீழ் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டது. மேலும், வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு அடைக்கலம் அளித்த ஒரு வணிக நிறுவனத்தின் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

WATCH OUR LATEST NEWS