ஈப்போ, ஜன.7-
நான்கு வயது சிறுவன் ஒருவன் உயிரிழக்கும் அளவிற்கு அவனை கண்காணிப்பதில் அலட்சிப்போாக்கை காட்டியதாக பாலர் பள்ளியைச் சேர்ந்த இரண்டு பெண் ஆசிரியர்கள் ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.
60 வயது எஸ்.பி. ஈஸ்டர் கிறிஸ்டீனா மற்றும் 20 வயது எம். மனிசா ஆகிய இரண்டு ஆசிரியர்களும் நீதிபதி அஸிஸா அகமட் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
இவ்விருவரும் உரிய கண்காணிப்பை செலுத்தாத காரணத்தினல் நான்கு வயது சிறுவன் வி. தனேஸ் நாயர், பாலர் பள்ளியையொட்டிய நீச்சல் குளத்தில் விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது.
இவ்விருவரும் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி காலை 10.07 மணியளவில் ஈப்போ, செம்மோர். பண்டார் பாரு ஸ்ரீ கிளேப்பாங்கில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.