கோலாலம்பூர், ஜன.7-
தனக்கு எதிரான போதைப்பொருள் கட்டத்தல் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி முக்கிய அரசியல் பிரமுகரின் முன்னாள் உதவியாளர் முகமட் யூசோப் ராவ்த்தர், சட்டத்துறை அலுவலகத்தில் பிரதிநிதித்துவ மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
305 கிராம் கெனபிஸ் போதைப்பொருளை தன் வசம் வைத்தி ருந்ததாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள யூசோப் ராவ்த்தரின் பிரநிதித்துவ மனுவை கடந்த ஜனவரி 2 ஆம் தேதி சட்டத் துறை அ லுவலகம் பெற்றதாக துணை பப்ளிக் பிராசிகியூட்டர் நூர் டயானா முகமட், இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
யூசோப் ராவ்த்தருக்கு எதிரான குற்றவியல் வழக்கு விசாரணை உயர் நீதிமன்றநீ திபதி டத்தோ முகமட் ஜமில் ஹுசேன் முன்னிலையில் தொடங்கியுள்ள வேளையில் அந்த குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கோரி அந்த முன்னாள் ஆய்வாளர், பிரதிநித்துவ மனு ஒன்றை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.