நேபாளில் நிலச்சரிவு, மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை

கோலாலம்பூர், ஜன.6-


இன்று செவ்வாய்க்கிழமை நேபாளில் உலுக்கிய நிலச்சரிவு சம்பவத்தில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா அறிவித்துள்ளது.

நேபாள் – திபெத் எல்லைப்பகுதியான லாபுசே என்ற இடத்திலிருந்து 84 கிலோ மீட்டர் தொலைவில் நிகழ்ந்த இந்த நிலச்சரிவு சம்பவத்தில் கிட்டத்தட்ட 50 பேர் மாண்டதாகவும் 60 பேர் காயமுற்றதாகவும் கூறப்படுகிறது.

இன்று காலை 6.35 மணியளவில் உலுக்கிய இந்த நிலச்சரிவு சம்பவம் ரிக்டர் அளவுக்கோளில் 6.5 ஆக பதிவாகியுள்ளது. நேபாளில் இருக்கும் மலேசிர்கள் சற்று விழிப்பாக இருப்பதுடன் அந்நாட்டின் அதிகாரிகள் வெளியிடக்கூடிய உத்தரவுகளை பின்பற்றி நடக்கமாறு விஸ்மா புத்ரா அறிவுறுத்தியுள்ளது.

WATCH OUR LATEST NEWS