ஜன.7-
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது வீட்டில் உறவினரின் 5 வயது மகளை மானபங்கம் செய்ததாக கூறப்படும் 15 வயது இளைஞனை 7 நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைக்குமாறு மலாக்கா, ஆயர் குரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
பள்ளிக்கு செல்லாத அந்த பதின்ம வயதுடைய இளைஞன், மலாக்கா, புக்கிட் ரம்பையில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
2017 ஆம் ஆண்டு சிறார் பாலியல் துன்புறுத்துதல் சட்டத்தின் கீழ் அந்த இளைஞத்ர கைது செய்யப்பட்டுள்ளதாக மலாக்கா மாநில இடைக்கால போலீஸ் தலைவர் டத்தோ முகமட் நஸ்ரி ஜவாவி தெரிவித்தார்.