50 வயது நபருக்கு 57 ஆண்டு சிறை

ஜன.7-

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தனது 13 வயது சொந்த மகளை பாலியல் பலாத்காரம் புரிந்த குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு கூச்சிங் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 57 ஆண்டு சிறை மற்றும் 10 பிரம்படித்தண்டனை விதித்தது.

கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி, சரவாக், லுண்டு என்ற இடத்தில் உள்ள தனது வீட்டில் அந்த நபர் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அந்த நபர் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் காலத்தில் அவருக்கு நல்லுரைகள் வழங்கப்பட வேண்டும் என்பதுடன் சிறைத் தண்டனை முடிவடைந்து வெளியேறும் போது இரண்டு ஆண்டுகள் போலீஸ் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று நீதிபதி Iris Awen Jon உத்தரவிட்டார்.

WATCH OUR LATEST NEWS