புத்ராஜெயா, ஜன. 8-
நீதிபதிகள் நியமன ஆணையத்தில் எந்தவொரு தரப்பினரும் தலையிட்டால் அல்லது குறுக்கிட்டால் அது ஒரு குற்றச்செயலாக கருதப்படும் என்று நாட்டின் தமைமை நீதிபதி துன் தெங்கு மைமூன் துவான் மாட் எச்சரித்துள்ளார்.
குற்றவியல் சட்டம் 34 ஆவது பிரிவின் கீழ் இது போன்ற குறுக்கீடுகளை செய்து, அந்த நபர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் குறைந்த பட்சம் இரண்டு ஆண்டு சிறை அல்லது ஒரு லட்சம் ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தலைமை நீதிபதி நினைவுறுத்தியுள்ளார்.