RTK 3.0 திட்டம் தற்போதைக்கு இல்லை, குடிநுழைவுத்துறை தெளிவுபடுத்தியது

ஜன.11-

அரசாங்கம் RTK எனும் தொழிலாளர் மறுசீரமைப்புத் திட்டத்தை கூடிய விரைவில் மீண்டும் அமல்படுத்தவிருப்பதாகக் கூறப்படுவது உண்மையில்லை. சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டுள்ள அத்தகவலை மலேசிய குடிநுழைவுத்துறை மறுத்துள்ளது. RTK 3.0 திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது குறித்து இதுவரை முடிவேதும் எடுக்கப்படவில்லை என குடிநுழைவுத்துறைத்துறை தலைமை இயக்குனர் Datuk Zakaria Shaaban தெரிவித்தார்.

RTK திட்டத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முனையும் எந்தவொரு தரப்பையும் நம்ப வேண்டாம் என அவர் பொதுமக்களுக்கு ஆலோசனை கூறினார். குடிநுழைவுத்துறை சார்ந்த உண்மையான அதே சமயம் அண்மையத் தகவல்களைப் பெற அதன் அதிகாரப்பூர்வ இணைய மற்றும் சமூக வளைத்தளங்களை வலம் வருமாறு Zakaria அறிக்கையொன்றின் வழி கேட்டுக் கொண்டார்.

அரசாங்கத்தின் கடுமையான விதிமுறைகளின் கீழ் தகுதியான முதலாளிகள் இந்நாட்டிலுள்ள அந்நிய நாட்டவர்களைச் சட்டப்பூர்வமான தொழிலாளர்களாகப் பணியமர்த்திக் கொள்ள வகை செய்யும் சிறப்புத் திட்டமே இந்த RTK திட்டமாகும்.

WATCH OUR LATEST NEWS