ஜன.11-
அமெரிக்கா, Los Angelesசில் பேரளவிலான காட்டுத் தீ பரவியுள்ள நிலையில், அங்குள்ள மலேசியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியிருக்கிறது. அக்காட்டுத் தீச் சம்பவத்தில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. Washington நில் உள்ள மலேசியத் தூதரகம், Los Angelesசில் உள்ள மலேசியப் பேராளரகம் வாயிலாக Wisma Putra நிலைமையைத் தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக அமைச்சர் Datuk Seri Mohamad Hassanநைத் தொடர்பு கொள்கையில் அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மலேசியர்களின் பாதுகாப்பு உறுதிச் செய்யப்பட்டு வருகிறது. அதே சமயம் அதிகாரத்துவ தரப்பின் உத்தரவுகளைப் பின்பற்றி கவனமாக இருக்குமாறும் உதவி தேவைப்பட்டால் மலேசியப் பேராளரகத்தைத் தொடர்பு கொள்ளுமாறும் அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
Californiaவில் ஏற்பட்டுள்ள மாபெரும் காட்டுத் தீ கடந்த பல ஆண்டுகளில் காணாத மிகவும் மோசமானப் பேரிடராகக் கருதப்படுகிறது. அங்கு பல சேதங்கள் ஏற்பட்டுள்ளதோடு குறைந்தது ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேர் தத்தம் இருப்பிடங்களைக் காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.