ஜன 12
ஈப்போவில் உள்ள Padang Sikh Union திடலில் வசந்தன் கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் வசந்தன் கிண்ண கால்பந்து போட்டி சிறப்பாக நடைபெற்றது. 23 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான இந்தப் போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து 16 குழுக்கள் கலந்து கொண்டன. Butterworth rangers குழு முதலிடத்தையும், KSR TASEK குழு இரண்டாமிடத்தையும், IPOH FRIDAY குழு மூன்றாமிடத்தையும், தாப்பா தமிழன் குழு நான்காமிடத்தையும் பிடித்தன.
இந்த போட்டியின் முக்கிய நோக்கம் இந்திய இளைஞர்கள் விளையாட்டுத் துறையில் வளர்ச்சி அடைந்து மாநில , தேசிய அளவில் பங்கேற்று விளையாட வேண்டும் என்பதே என்று அவர் விளக்கினார்.
எதிர்காலத்தில் கால் பந்து துறையில் அதிகமான இளைஞர்கள் பங்கேற்கும் வகையில் அவர்களை ஊக்குவிக்க இதுபோன்ற போட்டி நாடு முழுவதிலும் நடத்தப்படவேண்டும் என நந்தகுமார் கேட்டுக்கொண்டார்.
இந்தப் போட்டி முதல் முறையாக நடத்தப்படுவதாகவும், இதற்கு முன்பு மூன்று முறை வெட்டரன் கிண்ண கால பந்துப்போட்டியை வசந்தன் கால்பந்து சங்கம் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.