ஜன.13-
நேற்று இரவு அலோ ஸ்டார்-பட்டர்வொர்த் சாலையின் 48.2 வது கிலோ மீட்டரில் நிகழ்ந்த கார் விபத்தில் 30 வயது தக்க மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். மழை பெய்து கொண்டிருந்தபோது, சந்திப்பில் வலது புறம் திரும்ப முயன்ற மோட்டார் சைக்கிளை பின்னால் வந்த கார் மோதியதால் இந்த விபத்து நேரிட்டது. மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டு வந்த பெண் எதிரே வந்த கார் மீது தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என கோலா மூடா மாவட்டக் காவல் துறைத் தலைவர் Asisten Komisioner Wan Azharuddin Wan Ismail தெரிவித்தார்.
இந்த விபத்து Proton Wira கார் ஓட்டுநரின் கவனக்குறைவால் நிகழ்ந்தது என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 24 வயது மிக்க அந்த ஓட்டுநர், முன்னாள் செல்லும் வாகனத்தைப் பின்தொடரும்போது போதுமான இடைவெளியை கடைபிடிக்க தவறியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கார் ஓட்டுநருக்கு போதை பொருள் பரிசோதனை செய்ததில் எதிர்மறை முடிவு வந்தது. எனினும், அவர் சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் கீழ் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.