ஜன.13-
ஒரு டிரெய்லரின் முன்பகுதி திடீரென அது கொண்டு சென்ற கண்டெய்னரில் இருந்து பிரிந்ததால் கண்டெய்னர் சாலையின் நடுவில் விழுந்தது. சிசிடிவி காட்சிகளின்படி, கண்டெய்னர் பிரிவதற்கு முன்பு டிரெய்லர் சீராக சென்று கொண்டிருந்தது. இதனால் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்தில் சிக்குவதிலிருந்து தப்பியது. இந்த சம்பவத்திற்கு கண்டெய்னரை சரியாக பொருத்தாததே காரணம் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு அந்தக் கண்டெய்னர் ஓட்டுநர் காரணமல்ல என்றும், கண்டெய்னரை கையாண்டவர்களின் கவனக்குறைவே காரணம் என்றும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். கண்டெய்னரின் இணைப்பு சரியாக சோதிக்கப்படாததால் இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் என்றும், ஆரம்பத்திலேயே கவனமாக சோதித்திருந்தால் இந்த சம்பவத்தை தடுத்திருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். இது ஒரு தொழில்நுட்பக் கோளாறு என்றும், யாரும் வேண்டுமென்று செய்யவில்லை என்றும் சிலர் கூறினார்.