ஜன.13-
கடந்த வியாழக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற இரண்டு பேர் உட்பட மூன்று மீனவர்களைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் – மீட்புப் பணி மூன்றாவது நாளாகத் தொடர்கிறது. 47 வயது Asrulhisham Zainon, அவரது 16 வயது மகன் Shahril Aiman Asrulhisham, 16, 29 வயது Mohamad Al-Amin Sufian ஆகியோரைத் தேடும் முயற்சிகள் இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
கெடா, பெர்லிஸ் மாநிலங்களுக்கான Maritim Malaysia வின் இயக்குநர் Romli Mustafa இது குறித்து தெரிவிக்கயில், வான்வழி , கடல்வழி சாதனங்களைப் பயன்படுத்தி 371.28 சதுர கடல் மைல் பரப்பளவில் தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார். இதுவரை எந்த தடயமும் கிடைக்கவில்லை. காணாமல் போன மீனவர்கள் வியாழக்கிழமை மாலை முதல் கரைக்குத் திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.