ஜன.13-
ஜோகூர் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மொத்தம் 38 SPM தேவெழுதும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 21 பேர் நிவாரண மையங்களிலும், மற்றவர்கள் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 7 பேர் இன்று கணிதத் தேர்வை எழுதினர். கூலாயில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மாணவர் STPM தேர்வை எழுதினார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் நலன் கருதி, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள தேர்வு மையங்களுக்கு பதிலாக, ஆறு மாநிலங்களில் 133 மாற்று தேர்வு மையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாக கல்வித் துறைத் ஹலைமை இயக்குநர் Azman Adnan முன்பு தெரிவித்திருந்தார். ஜோகூரில் மட்டும் 49 ஆயிரத்து 980 மாணவர்கள் 376 மையங்களில் SPM தேர்வெழுதினர்.