பத்து புத்தே RCI விசாரணையில் மகாதீருக்கு ஆஜராக அனுமதி மறுப்பு

ஜன.13-

பத்து புத்தே தொடர்பான ராயல் அரச விசாரணை ஆணையத்தின் விசாரணையில் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமதுவின் நேரடி அல்லது வழக்கறிஞர் மூலமான பங்கேற்பை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. நீதிபதி அமர்ஜித் சிங், இதற்கான காரணத்தை உடனடியாக வெளியிடவில்லை, ஆனால் விரைவில் காரணத்தை வெளியிடுவதாக தெரிவித்தார். மகாதீர் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

RCI சட்டம் 1950 இன் பிரிவு 18 இன் படி, விசாரிக்கப்படும் நபர்கள் அல்லது விவகாரங்களில் தொடர்புடையவர்கள் வழக்கறிஞர் மூலம் பிரதிநிதித்துவப்படுத்தப்பட உரிமை உண்டு என்று மகாதீரின் வழக்கறிஞர் Rafique Rashid Ali வாதிட்டார். மகாதீர் விசாரணையின் முக்கிய நபர் என்பதால், அவர் ஆஜராகவும் பிரதிநிதித்துவப்படுத்தவும் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு செய்யத் தவறினால் விசாரணை செல்லாது என்றும் அவர் கூறினார்.

RCI அறிக்கை ஏற்கனவே பேரரசருக்கு சமர்ப்பிக்கப்பட்டதால் மகாதீரின் விண்ணப்பம் வெறும் சம்பிரதாயமானது என்று மூத்த வழக்கறிஞர் Shamsul Bolhassan வாதிட்டார். இந்த அறிக்கை பின்னர் நாடாளுமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில், மகாதீர் மீது மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவர் மீது காவல் துறை விசாரணை நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பத்து புத்தே மீதான இறையாண்மையை சிங்கப்பூருக்கு வழங்கிய ஆனைத்துலக நீதிமன்றத்தின் முடிவை மறு ஆய்வு செய்வதற்கான விண்ணப்பத்தை மகாதீர் திரும்பப் பெற்ற முடிவை அரச விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் மகாதீரின் பங்கு குறித்து குற்றவியல் விசாரணை நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS