ஜன.14-
நஜிப் ரசாக்கின் வீட்டுக்காவல் தொடர்பான விவகாரத்தில் அரசு வழக்கறிஞர் அலுவலகம் தடை உத்தரவு கோரியதை அமைச்சர் அசலினா தனிப்பட்ட முறையில் எதிர்த்துள்ளார். இந்த விவகாரம் பொது வெளியில் விவாதிக்கப்படுவதாலும், நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாலும் தடை விதிக்கக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.
பிரதமரின் விளக்கம் அரசாங்கத்தை சட்ட சிக்கலில் தள்ளும் என்று PAS கட்சி குற்றம் சாட்டியக் கருத்தை அசலினா மறுத்தார். நீதிமன்றமே இதில் முடிவெடுக்கும் என்று அவர் கூறினார். மேலும், இந்த தடை உத்தரவு அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை குறைக்கும் என்று அம்னோ உறுப்பினர் ஒருவர் எச்சரித்துள்ளார். முடா கட்சியும் இந்த தடை உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.