ஜன.14-
கெடா மாநிலத்தில் உள்ள விளம்பர பலகைகளிலும் அறிவிப்புப் பலகைகளிலும் ஆங்கில எழுத்துக்களுக்கு அடுத்தபடியாக ஜாவி எழுத்துக்களை கட்டாயமாக்க அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது. கவர்ச்சியான பெண்கள் இனவெறியைத் தூண்டுதல், அல்லது ஆயுதங்களை சித்தரிக்கும் காட்சிகள் விளம்பரங்களில் தடை செய்யப்படும். உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து விளம்பரங்களுக்கும் இந்த விதி பொருந்தும் என மாநில ஊராட்சி மன்றம், சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் Mansor Zakaria தெரிவித்தார்.
ஜாவி எழுத்துக்களை மேம்படுத்தவும், அதன் பயன்பாட்டை ஊக்குவிக்கும் துணை விதிகளுக்கு இணங்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஏற்கனவே உள்ள விதிகளின்படி, விளம்பரப் பலகைகளில் ஜாவி எழுத்துக்களை இரண்டாவது மொழியாக பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறது. இந்த புதிய திட்டம் மூலம், ஜாவி எழுத்துக்களின் பயன்பாடு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்ப்பதாக Mansor Zakaria மேலும் கூறினார்.