Sumbangan Asas Rahmah உதவித் தொகை நாளை முதல் பகிர்ந்தளிக்கப்பட உள்ளது

ஜன.14-

Sara எனப்படும் Sumbangan Asas Rahmah உதவித் தொகை நாளை முதல் பகிர்ந்தளிக்கப்பட உள்ளது. இந்தத் திட்டம் முந்தைய ஆண்டை விட அதிக நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளது. eKasih பதிவுகளில் உள்ள வறிய நிலை குடும்பங்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜனவரி முதல் மார்ச் 2025 வரை மாதத்திற்கு 100 ரிங்கிட் உதவித் தொகை MyKad மூலம் வழங்கப்படும். பின்னர், ஏப்ரல் 2025 முதல் இந்த தொகை மாதத்திற்கு 200 ரிங்கிட்டாக உயர்த்தப்படும். இந்தத் திட்டம் STR பயனாளிகளுக்கும் கிடைக்கும்.

மொத்தம் 5.4 மில்லியன் STR பயனாளிகள் ஏப்ரல் 2025 முதல் Sara திட்டத்தின் மூலம் கூடுதல் உதவிஹ் தொகையைப் பெறுவார்கள். இதில் eKasih பதிவுகளில் இல்லாதவர்களும் அடங்குவர். குடும்பங்களுக்கு மாதத்திற்கு 100 ரிங்கிட் உதவி வழங்கப்படும். துணை இல்லாத வயதானவர்களுக்கு மாதத்திற்கு 50 ரிங்கிட் உதவி வழங்கப்படும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தத் திட்டம் வறிய நிலை மக்களை இலக்காக் கொண்டு கஅவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS