ஜன.14-
மலேசிய சுகாதார அமைச்சின் உயர்மட்ட அதிகாரி ஒருவரைப் பற்றி டெலிகிராமில் பரவிய செய்தி பொய்யானது என்றும், அவரது நற்பெயரைக் கெடுக்கும் நோக்கத்துடன் பரப்பப்பட்டது என்றும் அமைச்சு உறுதி செய்துள்ளது. விசாரணையில், அந்த அதிகாரி ஜனவரி 4 ஆம் தேதி புத்ராஜெயா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்தது உண்மைதான் என்று தெரிய வந்துள்ளது. ஆனால், அவர் வரிசையை மீறி இடையூறு செய்தார் என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றது என சுகாதார அமைச்சு தெளிவு படுத்தியுள்ளது.
அந்த அதிகாரிக்கு வேண்டுமென்றே அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பொது மக்கள் தங்கள் புகார்களையும் கருத்துக்களையும் SisPAA என்ற இணையதளம் மூலம் தெரிவிக்கலாம் என்று அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இந்த அமைப்பு நியாயமான முறையில் புகார்களை விசாரிக்கும் நடைமுறைகளைக் கொண்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.