ஜன.14-
சமையல் எண்ணெய் மானியங்களை முறையாக வழங்கவும், கசிவுகளைத் தடுக்க இலக்கிடப்பட்த் தரப்பினரைச் சென்றடைய கொள்முதல் முறைகளை மேம்படுத்தவும் Fomca எனப்படும் மலேசிய பயனீட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
தற்போதுள்ள கொள்முதல் முறை எளிதில் தவறாகப் பயன்படுத்தப்படுவதால், வெளிநாட்டினர் மட்டுமின்றி வணிகர்களும் மானிய எண்ணெயைப் பயன்படுத்துவதாகக் Fomcaவின் பொருளாளர் Nur Asyikin Aminuddin குறிப்பிட்டார். இதனால், உண்மையில் தேவைப்படுபவர்களுக்கு எண்ணெய் கிடைப்பதில்லை. மானியங்களை இரத்து செய்துவிட்டு நிதி உதவி வழங்குவது அல்லது சிறப்பு அடையாள அட்டை முறையை அறிமுகப்படுத்துவது போன்ற முன்மொழிவுகளை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது என்றார்.
ஒரு கிலோ பாக்கெட் சமையல் எண்ணெய் 2 ரிங்கிட் 50 சென்னுக்கு விற்கப்படும் எண்ணெயில் மோசடியும் கசிவும் அதிகரித்து வருகிறது. இதனால் அரசாங்கத்திற்கு மில்லியன் கணக்கான ரிங்கிட் இழப்பு ஏற்படுகிறது. அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும. சில வியாபாரிகளும் கடைக்கார்களும், எண்ணெய் வாங்க விரும்புவோர் வேறு சில பொருட்களையும் வாங்க வேண்டும் என்ற நிபந்தனையை விதிப்பதாகவும், இதனால் பயனீட்டாளர்கள் சிரமத்திற்கு ஆளாவதாகவும் Nur Asyikin கூறினார். இந்த வணிகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர் வலியுறுத்தினார். PAKW எனப்படும் நியாயமான வாழ்க்கைச் செலவு அடிப்படையைப் பயன்படுத்தி, மானிய எண்ணெய் விநியோக முறையை மேலும் முறையாக செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.