பினாங்கு தீவில் கார்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட வேண்டும்

ஜன.15-

பினாங்கு தீவில் கார்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று நிபுணர்கள் ஆலோசனைக் கூறியுள்ளனர்.

தற்போது பினாங்கு தீவில் கார்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் அந்த தீவில் எல்.ஆர்.டி. சேவை நடைமுறைக்கு வரும் வரையில் கார்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் திட்டத்தை மாநில அரசாங்கம் ஒத்தி வைக்கக்கூடாது.. காரணம், அது அந்த தீவின் நடப்பு போக்குவரத்து நிலைமையை மேலும் மோசமாக்கலாம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

பினாங்கு தீவில் எல்.ஆர்.டி. ரயில் சேவையை 2031 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்துவதற்கு மாநில அரசாங்கம் இலக்கு கொண்டுள்ளது.

அதுவரையில், கார்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் திட்டத்தை மாநில அரசாங்கம் நடைமுறைப்படுத்தினால் மட்டுமே நடப்பு போக்கு வரத்து முறை சுமூகமாக இருப்பதற்கு வகை செய்ய முடியும் என்று போக்குவரத்து முறை நிபுணர்களான Anil Netto மற்றும் Wan Agyk Wan Hassan ஆகியோர் ஆலோசனைக் கூறுகின்றனர்.

WATCH OUR LATEST NEWS