டாமான்சாரா நாடாளுமன்றத் தொகுதி நிலையிலான பொங்கல் விழா

ஜன.15-

டாமான்சாரா நாடாளுமன்றத் தொகுதி நிலையிலான பொங்கல் விழா Persatuan Komuniti India Damansara Damaiயும் டாமான்சாரா நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகமும் இணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழாவில் இலக்கவியல் அமைச்சரும் அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கோபிந்த் சிங் டியோ கலந்து கொண்டு சிறப்பித்தார்.

சமூகம் நிலையிலான பொருளாதார மேம்பாட்டையும் நாட்டின் பொருளாதார மேம்பாட்டையும் உறுதி செய்வதன் முக்கியத்துவம் அவ்விழாவில் வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக, இந்திய சமூகத்தின் நல்வாழ்வுக்காக அரசாங்கம் எடுக்கும் முயற்சிகள் குறித்தும் பேசப்பட்டது. இலக்கவியல் கல்வியறிவு, புத்தாக்கம், இலக்கவியல் பொருளாதார வாய்ப்புகள் மூலம் இந்திய சமூகத்தை மேம்படுத்துவதில் தமது அமைச்சு உறுதியாக இருப்பதாக கோபிந்த் சிங் தெரிவித்தார்.

இந்த விழாவில் பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற உறுப்பினர் சுரேஷ் கங்கையா, டாமான்சாரா டாமாய் இந்தியர் சமூக நல அமைப்பின் தலைவர் இரமேஷ், செலாயாங் நகராட்சி மன்ற உறுப்பினர்களான CALVIN CHEONG, U Chin Ong, கோத்தா டாமான்சாரா காவல் நிலையத் தலைவர் ASP Mohd Nasir, பெட்டாலிங் ஜெயா மாவட்டக் காவல் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு மலேசியரும், அவர்களின் பின்னணியைப் பொருட்படுத்தாமல் இலக்கவியல் யுகத்தின் நன்மைகளை அடைய வேண்டும் என்பதே அரசாங்கத்தின் குறிக்கோள் என்று வலியுறுத்தினார். பொங்கல் திருநாள் இந்திய சமூகத்தின் ஒவ்வொரு வீட்டிலும் வளமை, மகிழ்ச்சி, வெற்றி ஆகியவற்றைத் தர வேண்டுமென கோபிந்த் சிங் வாழ்த்தினார்

WATCH OUR LATEST NEWS