89 குற்றச்சாட்டுகளின் கீழ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்

ஜன.15-

மலேசிய கடற்படையைச் சேர்ந்த, ஓய்வுபெற்ற அதிகாரி Haizad Ismail என்பவர், சுல்தான் இஸ்மாயில் இராணுவ முகாமில் 1.07 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கொள்முதல் மோசடியில் ஈடுபட்டதாக 89 குற்றச்சாட்டுகளின் கீழ் ஜோகூர் பாரு Sesyen நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார். கேப்டன் Shaiful Fadzli Ismailலை ஏமாற்றி, இராணுவ அதிகாரி குடியிருப்பில் பணிகள் முடிவடைந்ததாக நம்ப வைத்து பண மோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர் மீது குற்றவியல் சட்டத்தின் பிரிவு 420 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊழல் தடுப்பு ஆணையம் 1 இலட்சத்து 80 ஆயிரம பிணைத்தொகை கோரிய நிலையில், நீதிமன்றம் அவரது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு 39 ஆயிரம் ரிங்கிட் ஆக குறைத்தது. வழக்கு ஆவணங்களை சமர்ப்பிப்பதற்காக ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS