ஜன.15-
உலு லங்காட், Beranangகில் உள்ள காபூல் ஆற்றின் நிறம் இளஞ்சிவப்பாக மாறியதற்கு காரணம் பிளாஸ்டிக் மறுசுழற்சி ஆலையில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவுநீர் என்று சுற்றுச்சூழல் துறை கண்டறிந்துள்ளது. சுமார் 300 மீட்டர் நீளமுள்ள மாசுபாடு ஆலையின் அருகில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆலை முந்தைய இரவில் செயல்படவில்லை என்றும், திட்டமிடப்படாத கழிவுநீர் வெளியேற்றமே இந்த மாசுபாட்டிற்கு காரணம் என்றும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக சிலாங்கூர் மாநில இயக்குநர் Nor Aziah Jaafar தெரிவித்தார்.
மாசுபாட்டைத் தடுக்கும் நடவடிக்கையாக, ஆலையின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. இந்த சம்பவம் சுற்றுச்சூழல் தரச் சட்டம் 1974 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.