கோலாலம்பூர், ஜன.16-
முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசினுக்கு எதிரான 7 குற்றச்சாட்டுகளையும் கூட்டாக விசாரணை செய்வதற்கு கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது.
நாட்டின் பிரதமராக தாம் பதவியில் இருந்த காலத்தில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக 4 குற்றச்சாட்டுகளையும், சட்டவிரோதமாக நிதியை பெற்றதாக 3 குற்றச்சாட்டுகளையும் ஒரே வழக்கில் ஒரு சேர விசாரணை செய்வதற்கு நீதிபதி அஸுரா அல்வி அனுமதி அளித்தார்.
ஒரு குற்றச்சாட்டிற்கும், மற்றொரு குற்றச்சாட்டிற்கும் தொடர்பு இருக்குமானால் அவற்றை ஒரு சேர விசாரணை செய்வதற்கு குற்றவியல் சட்டம் 165 ஆவது பிரிவு அனுமதி வழங்குவதாக நீதிபதி சுட்டிக்காட்டினார்.
7 குற்றச்சாட்களையும் கூட்டாக விசாரணை செய்வது மூலம் நேரத்தையும், நீதிமன்ற வளத்தையும் மிச்சப்படுத்த முடியும் என்று நீதிபதி அஸுரா விளக்கினார்