தம்பின், ஜன.16-
மணல் லோரியும், வெட்டுமர லோரியும் சம்பந்தப்பட்ட கோர விபத்தில் தந்தை உயிரிழந்த வேளையில் மகன் சொற்ப காயங்களுடன் உயர் தப்பினார்.
இச்சம்பவம் இன்று காலை 6 மணியளவில் நெகிரி செம்பிலான், ஜாலான் தம்பின் – கிம்மாஸ் சாலையின் 37 ஆவது கிலோ மீட்டரில் தம்பினுக்கு அருகில் நிகழ்ந்தது.
இதில் 62 வயது வெட்டுமர லோரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மாண்ட வேளையில், லோரி உதவியாளரான அவரின் மகன் காயங்களுக்கு ஆளாகினார்.
ஜெலாயிலிருந்து மலாக்காவை நோக்கி சென்று கொண்டிருந்த மணல் லோரி, வலது புறத்தில் வளைவதற்கு நின்று கொண்டு இருந்த வேளையில் பின்புறம் வந்த வெட்டு மர லோரி, மணல் லோரியில் மோதியதாக தம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் அமிருடீன் சரிமான் தெரிவித்தார்.