கோலாலம்பூர், ஜன. 16-
1 எம்.டி.பி. வழக்கில் தேடப்பட்டு வரும் தொழில் அதிபர் ஜோ லோவை தமக்கு அறிமுகப்படுத்தியவர் தமது வளர்ப்பு மகன் ரிஸா அஸிஸ் என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
ரிஸா அஸிஸும், ஜோ லோவும் ஒரே வகுப்பில் படித்த சக மாணவர்கள் ஆவர். ஜோ லோவின் அண்ணன் தாயிக் சென்னும் ரிஸா அஸிஸுக்கு நன்று அறிமுகமாணவர்தான் என்று நஜீப் குறிப்பிட்டார்.
ஜோ லோவின் ஆடம்பரமான வாழ்க்கை முறை, உலகம் முழுவதும் ஆடம்பரமான சொத்துக்களை கொண்டிருப்பது தொடர்பில் அவருக்கு எதிராக எதிர்மறையான தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன.
இது தமக்கு பல்வேறு அசெகரியங்களை ஏற்படுத்தியது. இதனால் அவரை எதிர்க்க வேண்டிய நிலைக்கு தாம் ஆளாகியதாக 1 எம்.டி.பி. வழக்கில் சாட்சியம் அளிக்கையில் நஜீப் மேற்கண்டவாறு கூறினார்.