அரசாணை உத்தரவு பொது மக்கள் விவாதிப்பதற்கு தடை உத்தரவு கோருகிறது சட்டத்துறை அ லுவலகம்

கோலாலம்பூர், ஜன. 16-

தன்னை வீட்டுக்காவலில் வைப்பதற்கு அரசாணை உத்தரவை நிறைவேற்றும்படி சட்டப் போராட்டம் நடத்தி வரும் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக் தொடர்புடைய அரசாணை உத்தரவு குறித்து பொது மக்கள் விவாதிப்பதற்கு தடை உத்தரவு கோரி, சட்டத்துறை அலுவலகம் தனது விண்ணப்பத்தை தொடர்ந்து சமர்ப்பிக்கவிருக்கிறது.

இந்த விண்ணப்பம் தொடர்பாக நீதிமன்றம் ஓர் உத்தரவை பிறப்பிக்கும் வரையில் தடை உத்தரவுக்கோரி, சட்டத்துறை அலுவலகம் தொடர்ந்து தனது விண்ணப்பத்தை முன்னெடுக்கும் என்று சட்டத்துறை அலுவலகத்தின் சிவில் வழக்குப்பிரிவின் துணைத் தலைவர் Shamsul Bolhassan தெரிவித்தார்.

அரசாணை உத்தரவு என்பது அரச பரிபாலனம், சமயம் மற்றும் இனம் தொடர்புடைய 3R விவகாரமாகும். உணர்ச்சிகரமான இவ்விவகாரத்தை பொது மக்கள் விவாதிப்பதிலிருந்து அரச பரிபாலனத்தை பாதுகாக்கும் வகையில் வரும் ஜனவரி 20 ஆம் தேதி ஓர் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும் என்று அந்த கூட்டரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

சட்டத்துறை அலுவலகத்தின் இந்த விண்ணப்பத்தை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளுமானால், அரசாணை உத்தரவு தொடர்பில் எந்தவொரு தரப்பினரும் , அது குறித்து விவாதிப்பதற்கு தடை விதிக்கப்படும்.

எனினும் இப்படியொரு விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கு சட்டடத்துறை அலுவலகத்திற்கு அமைச்சரவை எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்பதை தொடர்புத்துறை அமைச்சர் Fahmi Fadzil நேற்று விளக்கம் அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS