மூன்று பாகிஸ்தானியர்களுக்கு மரணம் விளைவித்ததாக குற்றச்சாட்டு

ஜன. 16-கடந்த ஆண்டு நோன்புப்பெருநாளின் போது சிறப்பு தொழுகையை நிறைவேற்றுவதற்கு சென்று கொண்டிருந்த மூன்று பாகிஸ்தான் ஆடவர்களை காரினால் மோதி மரணம் விளைவித்ததாக உணவக உதவியாளர் ஒருவர், தெலுக் இந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

உள்ளூரைச் சேர்ந்த 37 வயது Mohd Azizol Bashed என்ற அந்த நபர், மாஜிஸ்திரேட் Naidatul Athirah Azman முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி ஹிலிர் பேராக், ஜாலான் தெலுக் இந்தான் – பீடோர் சாலையின் 16 ஆவது கிலோ மீட்டரில் Mohd Azizol இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டு சிறை மற்றும் கூடிய பட்சம் 50 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்க வகை செய்யும் 1987 ஆம் ஆண்டு போக்குவரத்து சட்டத்தின் கீழ் அந்த உணவக உதவியாளர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS